search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளவாரி வாய்க்கால்"

    வெள்ளவாரி வாய்க்காலில் தூர்வாரப்படாமல் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்துள்ளன. கழிவு நீர் செல்ல முடியாமல் தேங்கி உள்ளதால் கொசுக்கள் பெருகி சுகாதார கேடு உருவாகி நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட சங்கர்தாஸ் சுவாமிகள்- தேவகி நகர் வழியாக வெள்ளவாரி வாய்க்கால் உள்ளது.

    தற்போது இந்த வெள்ளவாரி வாய்க்கால் தூர்வாரப்படாமல் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்துள்ளன.

    மேலும் இந்த வாய்க்காலில் செடி- கொடிகள் முளைத்து தூர்ந்து போய் உள்ளது. இதனால் கழிவு நீர் செல்ல முடியாமல் ஆங்காங்கே தேங்கி உள்ளன. இதன் காரணமாக கொசுக்கள் பெருகி சுகாதார கேடு உருவாகி நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    மேலும் வெள்ளவாரி வாய்க்காலில் இணைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வடிகால் வாய்க்கால் அடிமட்டத்தில் இருந்து இணைக்காமல் சற்று மேலே இணைக்கப்பட்டுள்ளதால் மழை வெள்ளத்தின் போது கழிவுநீர் வீடுகளுக்குள் புகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

    தற்போது மழைக்காலம் தொடங்கும் நிலையில் இப்பகுதி மக்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும், கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள சேதம்போல் இப்பகுதியில் ஏற்படாமல் தடுக்க வெள்ளவாரி வாய்க்காலை உடனடியாக தூர்வார வேண்டும் என்றும், வெள்ளவாரி வாய்க்காலில் இணைக்கப்பட்டுள்ள கழிவு நீர் வாய்க்கால்களை சற்று கீழ் மட்டத்தில் இணைக்க வேண்டும் என்றும் அப்பகுதி குடியிருப்போர் நல வாழ்வு சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×